Perambalur: Free training on making appalam pickles and masala powder on behalf of IOB – RSETI!

பெரம்பலூர் ஐஓபி வங்கியின் சார்பில், கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், வரும் ஏப்.4 ஆம்தேதி முதல் இலவசமாக சாம்பார், ரசம், குழம்பு, மிளகாய், இட்லி, பருப்பு பொடி வகைகள், சிக்கன், மட்டன், கரம், மீன், பிரியாணி மசாலா பொடி வகைகள், நெல்லிக்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், இஞ்சி, மாங்காய், பூண்டு ஊறுகாய் வகைகள், தக்காளி, பிரியாணி தொக்கு, வத்தல் குழம்பு பேஸ்ட், மிக்ஸ்ட் ப்ரூட் ஜாம், அப்பளம் வகைகள், நன்னாரி சர்பத், ஜூஸ் வகைகள், ஓம வாட்டர் ஆகியன செய்வது பற்றியும் அவற்றை பதப்படுத்தி பேக்கிங் செய்யும் முறை, அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்தல் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துதல் பற்றியும் சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட உள்ளது.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியின் போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்கதெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது ஏஏஐ- குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலை ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை வங்கி கணக்கு புத்தகம் பான்கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து; ஏப்ரல் 2-ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 04328277896 / 9488840328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அம்மையத்தின் இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!