Perambalur: Gandhi’s name removed from the 100-day employment scheme; DMK stages protest!

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப்பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து, திட்டத்தை முடக்குவது, வேலையாட்களை குறைப்பது பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்ன அண்ணல் காந்தியடிகளின் பெயரை இத்திட்டததில் இருந்து நீக்குவது, 100 நாள் வேலையையே இல்லாமல் செய்து, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் நாசகார சதிச்செயலையும், அதற்கு ஆதரவு தரும் அ.தி.மு.க.வைக் கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் சார்பில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் என். ராஜேந்திரன், கி முகுந்தன், அண்ணாதுரை, வக்கீல் செந்தில்நாதன்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி, மதிமுக பொதுச் செயலாளர் ஜெயசீலன், மக்கள் நீதி மையம் மாவட்ட தலைவர் முத்துக்குமார், விசிக மாவட்ட தலைவர் வக்கீல் ரத்தினவேல், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர்கள் ரமேஷ், ஞானசேகரன், தி.க. தங்கராசு, குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், எசனை குணசேகரன், செல்வம், மணிவாசகம், கீழக்கரை ரெங்கசாமி, நண்டு ஆறுமுகம், தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், தோழமைக்கட்சி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497