Perambalur: Get out | 9 people including the state president of the government employees’ association arrested for staging a sit-in protest in the collector’s office!
பெரம்பலூர் கலெக்டர் அறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் காந்திமதிநாதன் தலைமையில், அச் சங்கத்தினர் 7 பேர் சங்கத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது, கலெக்டர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவை சந்தித்து கோரிக்கை மனுவை ( ஆங்கிலத்தில்) அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறி வெளியே செல்லுமாறு ( get out) தெரிவித்தாராம். இதையடுத்து, காந்திமதிநாதன் உள்ளிட்ட 7 பேரும், ஆட்சியரின் செயலைக் கண்டித்து அவரது அறையிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, கலெக்டர் அளித்த தகவலை தொடர்ந்து பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று, காந்திமதி நாதன், அச் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பிரபு, மாவட்டத் தலைவர் அன்புராஜா, அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து எஸ்.பி ஆபிசிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு, மேற்கண்ட 9 பேரையும் போலீஸார் விடுவித்தனர்.
இதனால், அரசு பணியாளர்கள் வட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்தோடு, வரும் ஏப்.1ம் தேதி கலெக்டரை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கம்யூனிஸட் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கலெக்டருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.