பெரம்பலூரில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.
பெரம்பலூர் : தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பல ஆண்டுகளாக தொகுப்பூதிய முறையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகயை வலியுறுத்தி செவிலியர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் உள்ளிருப்பு போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர்.
பெரம்பலூர் அரசு மருத்துவமணையில் பணிபுரியும் தமிழக அரசு செவிலியர் நல சங்கத்தினர் இன்று காலையில் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பல ஆண்டுகளாக தெகுப்பூதிய முறையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 6-நிரந்தரப்பணி செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும், தேசிய தரச்சான்று பெற்ற அனைத்து அரசு மருத்துவமணைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கைகக்கு ஏற்ப நிரந்தர செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 7-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.