Perambalur: Goat thieves arrested; Stolen goats recovered; Quick action within a week! Public praises police!

பெரம்பலூர் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாயகிருஷ்ணன் வயலில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 25 ஆடுகளை கடந்த 23.02.2025 -ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தநிலையில், இன்று நாரணமங்கலம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் திருஞானம், ஜெயகுமார், காவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக டாடா ஏஸ் வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை பிடித்த போலீசார், நடத்திய விசாரணையில் கரூர், மாவட்டம், புலியூர், சமத்துவபுரத்தை சேர்ந்த வேலுசாமி மகன் பிரபு (28), மற்றும் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள காந்தி நகரை சேர்ந்த வேலு மகன் பூபதி (26) என்பதும் தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 25 ஆடுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும், பறிமுதல் செய்த நீதிமன்றத்தில், ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!