Perambalur: Gold and silver worth around Rs. 10 lakhs stolen near the Collector and SP office! Perambalur city is becoming a haven for robbers! People in fear!
பெரம்பலூரில் எஸ்.பி, கலெக்டர் ஆபீஸ் அருகே அடுத்தடுத்து நடந்து வரும் கொள்ளை சம்பவங்களால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும், பெரம்பலூர் மாவட்டம், கொள்ளையர்களின் கூடாராமாக மாறி தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் சாலையில் உள்ள ரோஸ் நகர் 3வது குறுக்கு தெருவில் வசித்துப் வருபவர்கள் கதலீஷ்வரன்(43), தேன்மொழி(40) தம்பதியினர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ள நிலையில், கதலீஷ்வரன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை பார்ப்பதற்காக கடந்த 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு சென்ற தேன்மொழி நேற்று நள்ளிரவு பெரம்பலூருக்கு திரும்பி வந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டின் பினபக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் மதிப்பிலான இரண்டு நெக்லஸ், 6 பவுன் வளையல் 5 பவுன் டாலர் செயின், தல ஒரு பவுன் மதிப்பிலான 2 பிரேஸ்லெட் என மொத்தம் 17 பவுன் தங்க நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்து, கணவர் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து, கொள்ளையர்கள் விட்டு தடயங்களை சேகரித்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், பெரம்பலூர் கலெக்டர், எஸ்.பி அலுவலகம் அருகே உள்ள பிரம்மா நகரில் வசிப்பவர்கள் மணி (60), கீதா(55), தம்பதியினர். மணி சிறுவாச்சூரில் டீக்கடை நடத்தி வருகிறார். கீதா குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் ஆசிரியராக உள்ளார், நேற்று அதிகாலை நாமக்கல் சென்று விட்டு, நேற்றிரவு 9 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டில் இருந்த ஒரு ஜோடி வெள்ளி வளையல், காப்பு, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரொக்கம் ரூ. 15 ஆயிரம் இருந்ததை கொள்ளையர்கள் வீட்டின் பூட்டின் உடைத்து எடுத்து சென்றனர். இது குறித்தும் பெரம்பலூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதேபோல, அபிராமபுரம் பகுதியில் உள்ளி குடியிருப்பிலும் திருடு போன சம்பவங்கள், பெரம்பலூர் எஸ்.பி , கலெக்டர் ஆபீஸ் அருகே கொள்ளைபோகும் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளதோடு, பெரம்பலூர் எஸ்.பி வீட்டில் போனலும் போகும் என பொதுமக்கள் கிண்டலடித்து பேசிக்கொள்கின்றனர். போலீசார் மெத்தன போக்கை கை விட்டு, கூடுதல் போலீசாரை பணியில் நியமித்து ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மாமூலான பணிகளோடு திருட்டை தடுப்பதிலும், அதிக கவனம் செலுத்த நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.