Perambalur: Government e-service center where free certificates can be obtained: A.Raja MP., Minister Sivasankar inaugurated it!
பெரம்பலூர் எம்.எல்.ஏ தொகுதியின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு இ சேவை மைய கட்டிடத்தை திமுக துணைப்பொதுச் செயலாளரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் ஆகிய இருவரும், கலெக்டர் கிரேஸ் தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். பின்னர், அரசு இ சேவை மைய செயல்பாட்டினை நீலகிரி எம்.பி ஆ.ராசா, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இருவரும் பார்வையிட்டு, இணைய வழி சான்றினை பயனாளிக்கு வழங்கினர்.
அரசின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்சேவைகள் துறையின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக அரசு இ -சேவை மையங்களை நடத்தி வருகிறது. இச்சேவையினை பொதுமக்களுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 234 சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவைமையங்கள் அமைத்திடவும், அம்மையங்களுக்கான நவீன மேசை கணினிகள் வழங்கி தொடங்கி வைத்துள்ளார்கள்.
இந்த இ-சேவை மையத்தில் சிறு குறு விவசாயி சான்றிதழ், ஓய்வூதியதிட்டம், விதவை சான்று, சாதிசான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வருவாய்த் துறையின் சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் திருமண நிதியுதவி திட்டம், இணைய வழி பட்டா மாறுதல், முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்கள், கலப்புத்திருமண சான்றிதழ்கள், சொத்து மதிப்பு சான்றிதழ்கள், 2 பெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் உள்பட அனைத்து திட்டங்களுக்கும் இணையவழி சான்றுகளை இலவசமாக பெறலாம்.என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், பெரம்பலூர் தாசில்தார் சரவணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.