Perambalur: Government Employees Association state executive meeting decides to blockade the Collector’s office!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் சீ.காந்திமதிநாதன் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. அதில், பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சித்துறை ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் சென்ற போது கெட் அவுட் எனக் கூறி நடந்தது குறித்தும், காவல்துறையின் அராஜக நடவடிக்கையால் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பாகவும் பொதுச் செயலாளர் தோழர்.க.பிரபு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில நிர்வாகிகளால் விரிவாக விவாதிக்கப்பட்டது.
01.04.2025 செவ்வாய்க்கிழமை அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தினை எழுச்சியாக நடத்துவது. 8.4.2025 செவ்வாய்க்கிழமை மாலை 05:30 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியரகம் முன்பு கருப்புப்பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. கலெக்டர் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாவிட்டால் 3வது கட்ட இயக்கமாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது எனவும், முடிவெடுக்கப்பட்டது.