Perambalur: Grievance redressal meeting for gas cylinder buyers; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு கேஸ் சிலிண்டர்கள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கேஸ் ஏஜன்சிகள் மீது வரப்பெற்ற புகார் மனுக்கள் மீது ஆயில் கம்பனிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து, கேஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன.30 அன்று பிற்பகல் 3 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கேஸ் ஏஜன்சிகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஆயில் கம்பனி விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நுகர்வோர்கள் கேஸ் சிலிண்டர்கள் சம்பந்தமாக குறைகள் இருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என்றும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகளை களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!