Perambalur: Grievances can be submitted in person to Election Observers ; Collector Informs!

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு தேர்தல் பொதுப்பார்வையாளரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொதுப்பார்வையாளராக நேகா பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 95668 38970 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 148.குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளராக அமர் பகதூர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 7200797144 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பெரம்பலூர் மாவட்ட (பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகள்) தேர்தல் செலவின பார்வையாளராக திரு. அனுஜ் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை 90432 14428 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஆகியோர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துவிட்டனர். பெரம்பலூர் அரசு சுற்றுலா மாளிகை அலுவலகத்தில் தங்கி இன்று முதல் பணிகளில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்க விரும்புவோர், அரசு சுற்றுலா மாளிகையில் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலருமான கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497