Perambalur: Health is a wonderful life; Lions Club members discuss with doctors!
பெரம்பலூர் அஸ்வின்ஸ் கூட்ட அரங்கில் ஆரோக்கியமே அற்புத வாழ்வு என்ற தலைப்பில் டாக்டர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பெரம்பலூர் லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் முரளி தலைமையில் நடந்தது. சாசன தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். அஸ்வின்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி. கணேசன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றும்போது, நேரமேலாண்மையை அனைவரும் கடைபிடிக்க வேண்டியம் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார்.
இதில் சிவா மருத்துவமனை பொதுநல மருத்துவர் டாக்டர் ராஜசேகரன், சரியான தூக்கம், சரிவிகித உணவு மற்றும் அன்றாட நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் மூலம் உடல் நலம் பேணுவதன் அவசியம் குறித்தும், உடலியல் இயக்கத்தை சரிபடுத்தும் சர்கார்டியன் ரிதம், அதிக நேரம் டி.வி. கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் செல்போன் அதிக பயன்பாட்டினால் ஏற்படும் மனநலபாதிப்புகள், இருதயநோய்க்கான காரணங்கள், மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
எஸ்.கே.எஸ். மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவன், தற்காலத்தில் உடலை சரிவர கவனிக்காமல் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யாமலும், மருத்துவசிகிச்சை எடுக்காமல் விடுவதன் வாயிலாக புற்றுநோயாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளித்து பேசினார்கள்.
பொன்னையா மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை மருத்துவர் டாக்டர் செந்தில்குமார், காதுமூக்குத்தொண்டையில் ஏற்படும் நோய் பாதிப்புகள், தொண்டையில் சதை வளர்ச்சி, டான்சில் மூக்கடைப்பு, சளி தொந்தரவுகள், ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கான மருத்துவசிகிச்சைகள் குறித்தும், மாணவ-மாணவிகளுக்கு கற்றல் திறனை பாதிக்கும் காதுமூக்குதொண்டை பிரச்சனைகள் அவற்றை தவிர்க்கும் வழிமுறைகள், குறட்டை, உள்ளிட்ட நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.
தேவராஜன் மருத்துவமனை கண்மருத்துவர் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி, கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் ,கண்ணை பராமரிப்பதன் அவசியம் குறித்தும். கணினி, செல்போன் உபயோகிக்கும்போது 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 வினாடிகள் கண்ணிற்கு ஓய்வுஅளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அதிகாலையில் யோகா மற்றும் தியான பயிற்சி மூலம் உடல்நலம்-மனநலம் பேணுவதன் அவசியம்குறித்தும் பேசினார்.
மலர் மருத்துவமனை பொது மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் விஜய் ஆனந்த், உடலில் சர்க்கரை குறைபாட்டினால் ஏற்படும் உடல்நலப்பிரச்சனைகள், உணவு உண்ணும்போது, கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், புரதசத்து, எண்ணெய்சத்து, காய்கறிகளின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துகள், கீரைகள் மூலம் கிடைக்கும் நார்சத்துகள் ஆகியவை அடங்கிய சரிவிகித உணவை சரியான கால இடைவெளியில் அன்றாடம் உட்கொண்டு, நீர்pழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சிகளை ஓய்வுபெற்ற ஆசிரியை பாரதி தொகுத்துஅளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், தமிழரசன் , பொருளாளர் தர்மராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.