Perambalur: Hero – Destiny 125cc new scooter launch event! Held at Sivakamam Motors!!
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள சிவகாமம் மோட்டார்ஸ்-ல், ஹீரோ மோட்டார் கம்பனியின் புதிய ஸ்கூட்டர் “”டெஸ்டினி” 125 சி.சி. அறிமுக விழா நடைபெற்றது. கருப்பு, வெள்ளை, சிவப்பு, ஊதா மெஜெந்தா உள்ளிட்ட 5 வகையான கலர்களில் வெளி வந்துள்ள இந்த ஸ்கூட்டரானது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 58 கி.மீ. மைலேஜ் தரக்கூடியது.
சிறந்த எல் .ஈ. டி. பல்புகள் மூலம் விளக்குகளின் வெளிச்சம் பிரகாசமாக அமைக்கப்பட்டுள்ளது. புளூ டூத் வசதியுடன், டிஜிட்டல் டிஸ்பிளே ஏற்படுத்தப்பட்டுள்ளது. கார்களைப்போல்
ஆட்டோமேட்டிக் இன்டிகேட்டர் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. செல்போன் சார்ஜர் மற்றும் மற்ற ஸ்கூட்டர்களில் இல்லாத நிறைய சிறப்பம்சங்கள் இதில் உள்ளது .குறிப்பாக விலை குறைவாகவும் உள்ளது இந்த அறிமுக விழா நிகழ்ச்சியில், பெரம்பலூர் கனரா வங்கி மேலாளர்கள் மஞ்சுநாத், கிரிநாத், சிவகாமம் மோட்டார்ஸ் நிறுவன ஆலோசகர் பச்சமுத்து ஆசிரியர், சிவகாமம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் இரா.ப.பரமேஷ்குமார், கோ.துளசிதரன், மேலாளர் கார்த்திகேயன், தி.மு.க.மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத்,
அரியலூர் கோல்டன் ஹார்வெஸ்ட் நெப்போலியன், ஜெயங்கொண்டம் ராசி ஏஜென்சீஸ் பசீர், பாடாலூர் கே.டி.மோட்டார்ஸ் அசோக், செந்துறை தனலெட்சுமி மோட்டார்ஸ் கந்தசாமி, திருமானூர் எஸ்.ஆர். மோட்டார்ஸ் ராஜா, நிதி நிறுவன மேலாளர்கள் இளவழகன், பாபு, விஜய், முத்தமிழ் மற்றும் சிவகாமம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.