Perambalur: Husband witnesses her being alone with her lover: Couple dies after consuming poison!

பெரம்பலூர் அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததை நேரில் கண்ட கணவன், வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து அவமானப்படுத்தியதால், விஷம் குடித்த ஜோடி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. உடல் சார்ந்த தேடலால் ஏற்பட்ட அவமானம் தாளாமல் உறவுகளை மறந்து, உயிரை மாய்த்து கொண்டதால், துணையை இழந்து குடும்பங்கள் தவிப்பதோடு குழந்தைகளின் எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்டப்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனியாண்டி (50), விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு சுமதி என்பவருடன் கடந்த 20 லருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 18 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதேபோல் பக்கத்து ஊரான முகமதுபட்டினம் கிராமத்தை சேர்ந்த ரில்வானா (28), என்பவருக்கு, பிள்ளையர்பாளையம் கிராமத்தை சேர்ந்த எஸ்.ஆர்.ரவி என்பருடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்று 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நெல் அறுவடை செய்யும் தொழில் செய்து வரும் எஸ்.ஆர்.ரவி பெண்கள் விசயத்தில் வீக்கானவர் என்பதால், அப்பகுதியில் மது, மாது என தீராத விளையாட்டு பிள்ளையாக வலம் வந்துள்ளார்.

இந்நிலையில், எஸ்.ஆர்.ரவியின் நண்பரான பழனியாண்டிக்கும், ரில்வானாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இருவருக்கும் இடையேயான பழக்க வழக்கம் எஸ். ஆர்.ரவிக்கு ஏற்கனவே அரசல் புரசலாக தெரிந்த நிலையில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் எஸ். ஆர்.ரவி, பழனியாண்டி, உள்ளிட்ட அதே ஊரை சேர்ந்த நண்பர்களான 5 பேர் ஊருக்கு ஒதுபுறமாக உட்கார்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில், வந்த ஒரு செல்போன் அழைப்பு வந்த போது பழனியாண்டி சரி, சரி, இந்தா உடனே வாரேன், இத விட எனக்கென்ன முக்கியமான வேலை என சம்பவ இடத்திலிருந்து நைசாக நழுவி அவசரம், அவசரமாக பைக்கில் அதிவேகமாக புறப்பட்டு சென்றுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த எஸ்.ஆர். ரவி, குத்தகை வயலில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த அவரது தந்தைக்கு போன் செய்து மனைவி ரில்வானா எங்கே? உங்கள் பார்வையில் தானே இருக்கிறாள் என கேட்ட போது, இங்கே தான் இருந்தார் தற்போது காணவில்லையே பா! என தெரிவித்ததால், எப்படியாவது இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என்று பழனியாண்டியை சிறிது தூர இடைவெளியில் பின்தொடர்ந்து சென்று எஸ்.ஆர்.ரவி நோட்டமிட்டுள்ளார்.

தனது இரு சக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு, ஆத்தங்கரையை ஓட்டியுள்ள ரவியின் குத்தகை வயல் பகுதிக்குள் சென்ற பழனியாண்டியும், அங்கு ஏற்கனவே காத்திருந்த ரில்வானவும் கட்டி அனைத்து, ஆரத்தழுவி என அன்பு மழையை பொழிந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பின்தொடர்ந்து சென்ற ரில்வானாவின் கணவர் எஸ்.ஆர். ரவி நேரில் கண்டதோடு, தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த கள்ளக்காதல் ஜோடியை கையும், களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கியதோடு, நீங்கள் தனிமையில் இருந்த செல்போன் வீடியோவை வைத்து உங்கள் இருவரையும் நான் என்ன செய்கிறேன் பாருங்கள் என மிராட்டியதாக தெரிகிறது. ரில்வானா மீது கொண்ட கள்ளக்காதல் மோகத்தால், கணவர் பின் தொடர்வதை கூட அறியாமல், அலட்சியமாக செயல்பட்ட பழனியாண்டியால் கணவரிடம் மாட்டிக்கொண்டோமே என அவமானம் தாங்காத ரில்வானா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவி விஷம் குடித்த விரத்தியால் ஆத்திரம் அடைந்த எஸ்.ஆர்.ரவி, பழனியாண்டியின் வீட்டிற்கு நேரில் சென்று உன்னால் என் மனைவி விஷம் குடித்து உயிருக்கு போராடி வருகிறாள். ஊரார் கேலி செய்து சிரிக்கும்படி என் குடும்ப மனத்தை வாங்கி விட்டு நீ உயிரோடு இருக்கிறாய்? நீயும் விஷம் குடித்து சாக வேண்டியது தானே?
என வாய்க்கு வந்தபடி பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனியாண்டி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கோயம்புத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரில்வானா மேல் சிகிச்சைக்காக வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த தகவலை அறிந்த ரில்வானாவின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பிள்ளையார்பாளையம் கிராமத்திற்கு நேரில் சென்று, நாங்கள் உயிருக்கு உயிராய் வளர்த்த மகளை காதலித்து திருமணம் செய்து அழைத்து வந்து, சாகடித்து விட்டாயே கதறி அழுது தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ரில்வானாவின் சடலத்தை தங்களிடம் ஒப்படைக்கும் படியும், அதனை இஸ்லாமிய முறைப்படி தாங்கள் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதனை ஏற்க மறுத்த எஸ்.ஆர்.ரவியின் குடும்பத்தார் ரில்வானாவிற்கு இந்து முறைப்படி இறுதி சடங்கை மேற்கொண்டு இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று பின்னாளில் ஏதும் பிரச்சனை வரக்கூடாது என எரியூட்ட முற்பட்ட போது அதற்கு, இங்கே இஸ்லாமியப் பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்யக்கூடதென எதிர்ப்பு கிளம்பியதால், 20 ஆயிரம் செலவில் எரியூட்டு வாகனத்தை சம்பவ இடத்திற்கு வரவழைத்து ரில்வானாவின் சடலத்தை எரித்து அஸ்தியை காவிரியில் கரைத்து விட்டனர்.

உடல் சார்ந்த தேடலுக்காக கள்ளக்காதலனுடன் உல்லாசத்தை அனுபவித்த போது கணவர் கண்ணில் பட்ட அவமானம் தாளாமல், பிள்ளைகளையும் குடும்பத்தையும், உறவுகளையும் பரிதவிக்க விட்டு விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!