Perambalur: Iftar fast at Siruvachur Almighty Vidyalaya Public School!
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ,ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் இஃப்தார் நோன்பு ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் சேர்மன். முனைவர். ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது. பள்ளியின் முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம் , துணை முதல்வர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் அப்துல் சலாம் பைஜி, ஆல்மைட்டி குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து ,ரம்ஜான் சிறப்பு பற்றியும் ,பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் பற்றியும், சிறப்புரை ஆற்றினார்.
சிறுவாச்சூர் பள்ளிவாசல் குலாம் அஹமது நோன்பு இருப்பதன் சிறப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார். ஆல்மைட்டி பள்ளியில் பயிலும் இஸ்லாமிய குழந்தைகளின் பெற்றோர்களும், குடும்பத்தாரும் திரளாக கலந்து கொண்டனர்.
பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர். இஸ்லாமிய வழிபாட்டிற்கு பிறகு ஆல்மைட்டி குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அனைவரும் கலந்து கொண்டு உணவருந்தினர்.