Perambalur: IJK party members stage a protest condemning the Karnataka government’s attempt to build a dam at Mekedatu!

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுப்பதோடு மேகதாது அணையை கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடும் கர்நாடக அரசின் செயலை கண்டித்து பெரம்பர் பழைய பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் எல். ரவிக்குமார் கண்டன உரை நிகழ்த்தினார். மண்டல தலைவர் காமராஜ், திருச்சி மண்டல இலக்கிய அணி செயலாளர் ஆர்.சி ராமலிங்கம், பெரம்பலூர் சட்டமன்ற மாவட்டத் தலைவர் ஏ. அழகுவேல், குன்னம் சட்டமன்ற மாவட்டத் தலைவர் எம் டி அன்பழகன் , பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருண், ஒன்றிய தலைவர்கள் சூரிய சேகர், பாலமுருகன், சக்திவேல், அருள்மணி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கர்நாடக அரசை கண்டித்து, கோஷங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!