Perambalur: In honor of the sanitation workers, the Bhoomi Puja work of laying the foundation stone for the road and sewage canal begins with the sprinkling of flowers with their hands!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூரில், தேசிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சத்து 27 ஆயிரத்து 850 மதிப்பில், சிமெண்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், அமைக்கும் பணியை கொளத்தூர் ஊராட்சியை சார்ந்த தூய்மை பணியாளர்களை முன்னிறுத்தி கவுரவப்படுத்தும் விதமாக அவர்களின் கைகளாலேயே மலர் தூவி பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான டி. ஆர்.சிவசங்கர், மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ் கிளைக் கழக செயலாளர்கள் துரைமாணிக்கம், சி.பி ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகம், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய சேர்மன் வெண்ணிலா ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உட்பட பொதுமக்கள் ஊராட்சி அலுவலர் பிரபு, கிராம அலுவலர் முருகானந்தம், கமல் உள்ளிட்ட ஊராட்சி அலுவலர்கள் திமுக கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.