Perambalur: In POCSO case, son gets 32 years in prison and Rs. 1.5 lakh fine; father gets 10 years in prison and Rs. 50 thousand fine! Court verdict!
பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்து, கொலை முயற்சியில் ஈடுபட்டமகனுக்கு 32 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ. 1.5 லட்சம் அபராதமும்; தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2017 -ம் ஆண்டு, பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செபஸ்தியன் மகன் விமல்ஜோ (32) செபஸ்தியன் (50). இவரது மனைவி ஆரோக்யமேரி (50) மற்றும் அந்தோணி மகன் சேசுராஜ் (48), இவரது மனைவி விஜயகுமாரி (43) ஆகியோர் மீது அரும்பாவூர் போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு Cr.No : 472/17 Uls 174(3) @ 498 (A) 305 IPC r/w 5 (l) , 6,16,17 of POCSO Act and 9, 10 of Child marrage Act and 306 IPC போக்சோ வழக்கு பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளில் விமல்ஜோ என்பவருக்கு 9 of Child marrage act – 2 வருடம் சிறைதண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், 5 (l) (6) Pocso Act – 20 வருடம் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும், 306 IPC Act – 10 வருடம் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் என மொத்தம் 32 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரு.1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவரது தந்தை செபஸ்தியனுக்கு 306 IPC Act – 10 வருடம் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் அபராதமும் விதித்தது. ஆரோக்கியமேரி, சேசுராஜ், விஜயகுமாரி ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்தும் பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.