Perambalur: In the village council meeting attended by the collector, Tamil Thai greetings! National Anthem is not playing!!
பெரம்பலூர் மாவட்டத்தில், காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலம்பாடி ஊராட்சியில் செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியில் தணிக்கை அறிக்கை கிராம சபை ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்திடவும், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலமாக கிராம ஊராட்சி வளர்ச்சிக்கினா பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கிடைக்க உறுதிப்படுத்துதல் மற்றும் ஜல்ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ் 100 சதவீதம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூகம் தீமை குறித்த உறுதிமொழி ஏற்க செய்தல், தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலை வாய்ப்பு முகாம்களில் பங்கேற்க செய்தல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் இதர வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். ஆலம்பாடி கிராமத்திற்கு அரசு பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனாஅண்ணாதுரை, வேளாண்மை துறை இணை இயக்குநர் கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்யா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் ஜெயஸ்ரீ, பெரம்பலூர் பிடிஓக்கள் ஜெயபால், இமயவர்மன், ஆலம்பாடி ஊராட்சித் தலைவர் கல்பனாசீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.