Perambalur: Insurance for maize crop; Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில், 2024-25-ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் இறவை மக்காச்சோளம் பயிரை பயிர் காப்பீடு செய்யலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள பசும்பலூர், வாலிகண்டபுரம், வெங்கலம் குறுவட்டத்தில் இறவை மக்காச்சோளம் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். இறவை மக்காச்சோளம் பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள். 31.01.2025 மற்றும் பீரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ.345- ஆகும்.
மக்காச்சோளப் பயிரை காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் நடப்பு பசலி அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்துடன் அருகில் உள்ள இ.சேவை மையம், கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் காப்பீடு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷெமா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இத்திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான இறுதி நாள் வரை காத்திராமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.