Perambalur: “It is our responsibility to cast our votes for the ‘Two Leaves’ symbol and send Saranya Anbazhagan to the Legislative Assembly,” says IJK President Ravi Pachamuthu.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூரில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து இன்று அக்கட்சியின் வேட்பாளர் சரண்யாவிற்கு பரப்புரை மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது: நாம் சிந்தித்து யார் வரவேண்டும் என்பதில் சிந்திக்க வேண்டும், நல்லவர்கள் வரவேண்டும், மக்களை அடிமைப்படுத்தும் அரசின் நமக்கு தேவை இல்லை, கட்டாயம் நல்லாட்சி வேண்டும் அதற்கு பொன்னும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சரண்யா அன்பழகனுக்கு இரட்டை இலை வாக்களிக்க வேண்டும், டாக்டர் பாரிவேந்தர் கூறியது போல் சரண்யா அன்பழகன் வெற்றி பெற்றால் ஆண்டிற்கு நூறு பேருக்கு இலவச கல்வி வழங்கப்படும் எனவும்

“பாரிவேந்தர் அவர்கள், உங்களுக்கு பெரம்பலூரில் எம்.பி-யாக இருந்தபோது என்னென்ன வாக்குறுதி கொடுத்தாங்க, எப்படி செயல்பட்டாங்கனு நமக்கு எல்லாருக்கும் நல்லா தெரியும். அதே மாதிரி, நேர்மையான கேண்டிடேட்டை எல்லா இடத்துலயும் ஐயா போட்டுருக்காங்க – ரெண்டு இடத்துலயும். எடப்பாடியார் ஆட்சியிலயும் நேர்மையான கேண்டிடேட்ஸ் தான் எல்லா இடத்துலயும் வர்றாங்க.

நீங்க திமுக, அதிமுக ஆட்கள் கூட பழகிப் பாருங்க. பழகினா உங்களுக்கு நல்லா தெரியும், அவங்க எவ்வளவு அன்பா, எளிதா உங்களை வரவேற்கிறாங்க, உங்களை ரிசீவ் பண்றாங்க, உங்க பிரச்சனையை காது கொடுத்து கேட்கிறாங்கனு நீங்க நல்லா கவனிக்கலாம். அதாவது, இங்க பக்கத்துல மாவட்டத்துல எல்லாம் போனீங்கன்னா, சில இடங்கள்ல போனா அமைச்சரை பார்க்கவும் முடியாது, பேசவும் முடியாது. பேசினா என்ன பண்ணுவாங்க? நான் சொல்லல, நீங்களே சொல்லுங்க.

மக்கள் எப்படி ட்ரீட் பண்றாங்கன்னு நீங்க பாத்துக்கோங்க.

இன்னைக்கு அந்த மாதிரி ஒரு ஆட்சி இல்லாம, ஒரு நல்லாட்சி மலரணும்னா, நமக்கு இரட்டை இலையில…: “நம்ம ஓட்டு!”

“இரட்டை இலை! இரட்டை இலை! மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. கிராமத்துல தெரிஞ்சவங்க இருப்பாங்க, தெரியாதவங்க இருப்பாங்க, கிராமத்துல விவசாயிகள் இருப்பாங்க, கடைக்கண்ணி வச்சிருக்கிறவங்க இருப்பாங்க. வங்களுக்கெல்லாம் வந்து இன்னைக்கு நமக்கு வந்து விவசாயி… கரெக்ட்தான் பிரதர். ஆமா, ஆமா.

சோ, நமக்கு வந்து அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்க. இந்தத் தொகுதி பிரச்சனைன்னு சில பேர் சொல்லிட்டு இருக்காங்க.

அதேபோல என் அன்புச் சகோதரர், பாசத்திற்குரிய சகோதரர் அன்புமணி ராமதாஸ்சும் இங்க வர இருக்காங்க. அவங்க வந்து நம்ம சரண்யா அவர்களுக்கு ஓட்டு கேட்பாங்க டெஃபனட்டா. அதாவது, இங்க வந்து தண்ணிப் பிரச்சனை வருது, தண்ணித் தட்டுப்பாடு வருது…”

அனைத்துப் பிரச்சனைகளையும் நாம் ஒன்றாகக் கூடி, இதைத் தீர்த்து வைப்பார் சரண்யா அன்பழகன். அவர் சார்பாகவும், ஐயா பாரிவேந்தர் சார்பாகவும், திரு. எடப்பாடி ஐயா சார்பாகவும் உங்களுக்கு நான் வாக்களிக்கிறேன், உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நம்ம மறந்துடாம அதுக்கு நாம செய்ய வேண்டிய ஒரே வேலை, ஒரே வேலை வாக்குச் சீட்டில் நமது சின்னம்…”

(கூட்டம்: இரட்டை இலை!)

“நமது சின்னம்…”

(கூட்டம்: இரட்டை இலை!)

“நமது சின்னம்…”

(கூட்டம்: இரட்டை இலை!)

“இரட்டை இலை… வெரி குட்! எல்லாரையும் பார்த்ததுல மகிழ்ச்சி, நன்றி! மறக்காம எல்லார் கிட்டயும் சொல்லுங்க… பக்கத்துல, அக்கம் பக்கத்துல அக்கா, தங்கைன்னு, அண்ணன், தம்பின்னு சொல்லி, நம்ம இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு, சரண்யா அன்பழகனை இந்த சட்டசபைக்கு அனுப்புவது நம்ம பொறுப்பு. நன்றி, வணக்கம்!” என பேசினார்.

முன்னாள் அதிமுக எம்.பி சந்திரகாசி, விஜிஎம் @ வெங்கடாசலம், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பாஜக, ஐஜேகே உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதே போல இன்று பெருமத்தூர் பேருந்து நிலையத்திலும் இதே போல சரண்யாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பெருமத்தூர் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக மற்றும் இந்திய ஜனநாயக கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியினர் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தில் நடிகர் ஆர் கே சுரேஷ் தெரிவித்ததாவது: அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும் நன்றி. 2026 இல் எடப்பாடி யாரோடு ஆட்சி மலரும் என்றும், உங்களது சின்னம் இரட்டை இலை என்றும் எல்லோரும் ஒன்று சேர்ந்து உள்ளோம்,நாம் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார். நம்ம வீட்டு பிள்ளை சரண்யா அன்பழகன் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார் என்றார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!