Perambalur: Jallikattu in Poolambadi; Minister Sivasankar and International Businessman Dato. S. Prakadeeshkumar flagged off the event.
பெரம்பலூர் அருகே உள்ள பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ எஸ். பிரகதீஸ்குமார் ஆகியோர், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், கலெக்டர் கிரேஸ் பச்சாவ், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா இ கா.ப., ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்து, பார்வையிட்டனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 632 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 327 மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்து கலந்து கொண்டனர். போட்டியில் மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். ஜல்லிக்கட்டை பார்க்க, சுமார் 5,000 க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். விழா குழுவினர் சார்பில், ஆங்காங்கே குடிநீர், நீர்மோர் போன்றவைகளை வழங்கினார்கள். சுமார் 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போட்டியில் காயமடைந்த 20 பேர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூலாம்பாடி ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர்கள், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், காவல், வருவாய், கால்நடைத் துறை உதவி மருத்துவர்கள், மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.