Perambalur: Jayalakshmi Announced as DMK Candidate; Party Cadres Celebrate at District DMK Office by Bursting Firecrackers and Distributing Sweets!

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக டாக்டர் S.T.ஜெயலெட்சுமி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் கீழக்கரை மு.அட்சயகோபால், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் நெ.அருண்குமார், வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார்,மதுபாலன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், நகர் மன்ற உறுப்பினர் ஜெயசித்ராமணிவாசகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அன்னமங்கலம் எஸ். செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி. ஆகியோர்களுக்கு மகளிர் அணியினர் உள்ளிட்ட தி.மு.க.வினர் நன்றி தெரிவித்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497