Perambalur: Kalaingar’s Kanavu Illam : No Funds – Those who bought the work order will have to demolish the house and suffer!
பெரம்பலூர்: தமிழ்நாடு அரசு ஏழை எளியர்கள் தொகுப்பு வீடு கட்டி குடி இருக்க பல்வேறு திட்டங்களின் பெயரில் வழங்கி வந்தது தற்போது கலைஞர் கனவு இல்லம் என தற்போதைய ஆட்சியில் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்ல திட்டன் கீழ் சுமார் 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டது. பின்னர், 2046 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பபட்டது. வேறு காரணங்களால், 846 வீடுகள் கட்டுவதை வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர், மீதமுள்ள 1200 வீடுகள் கட்ட வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டது.
வேலை உத்தரவுகள் பெற்றவர்கள் ஏற்கனவே, குடியிருந்த வீட்டை இடித்து தள்ளி விட்டு, புதிய வீடுகள் கட்ட பணிகள் சிலர் தொடங்கிய நிலையில், தற்போது அதிகாரிகள் நிதியில்லை என வாய்வழியாக தெரிவித்ததால் பல குடும்பங்கள் தவித்து வருகின்றனர். உள்ளதும் போச்சே என வருந்திவாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.