Perambalur: Karate color belt award ceremony at Siruvachur Almighty Vidyalaya Public School!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் கராத்தே கலர் பெல்ட் வழங்கும் விழா நடந்தது. சேர்மன் முனைவர் ஆ. ராம்குமார் தலைமை வகித்தார். முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம், துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு கலர் பெல்ட் பெற்றுக் கொண்டனர். கராத்தே மாஸ்டர் மற்றும் தேர்வாளர் மகாராஜன், கராத்தே பயிற்சியாளர் மணிகண்டன் இருவரும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைத்தனர்.