Perambalur: Kurumbalur college student groups stage a protest condemning the lathi-charge against students in Delhi!

இன்று குரும்பலூர் அரசு கலைக் கல்லூரியில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், முற்போக்கு மாணவர் கழகம் சார்பாக மாநில துணைச் செயலாளர் அம்பேத் கோகுல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்போக்கு மாணவர் கழகத்தை சார்ந்த பழனி பாரதி, ராம்குமார்,சதீஷ், பார்த்திபன், மாதவன்,கௌதம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர், போராட்டத்தில் மாணவர் மாணவிகள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!