Perambalur: Licenses of shops selling nicotine-laced tobacco products cancelled; fines imposed!

பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் பேரளி, அசூர், மூங்கில்பாடி, தெற்குமாதவி, அயினாபுரம், செட்டிக்குளம், எஸ்.குடிக்காடு, தெரணி ஆகிய ஊர்களில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்மந்தப்பட்ட கடைகளுக்கு தற்காலிகமாக உரிமம் நிறுத்தப்பட்டு கடைகள் மூடப்பட்டது. மேலும், தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை வஸ்துகள் விற்பனை செய்தால் பொதுமக்கள் நலன் கருதி 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தியோ அல்லது வாயிஸ் நோட் செய்யலாம் எனவும், மேலும் புகார் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், அழகுவேல், புவனா, விக்னேஷ், சின்னமுத்து உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497