Perambalur: Lorry-bike collision; Youth dies!
பெரம்பலூர் அருகே லாரி – பைக் மோதிக் கொண்ட விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தை சேர்ந்தவர் அப்துல்கலாம் (25), இவர், நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி, கன்டெயினர் லாரி சென்றது. அப்போது, லாரியும், எதிர்த்திசையில் வந்த வாலிபரின் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. பைக்கில் வந்த வாலிபர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் லாரியை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த வாலிபரின் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், பை -பாஸ் சாலையில் சற்று நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர் செய்தனர்.