Perambalur: Man arrested for possessing 42 kg of banned gutka; Police action!
பெரம்பலூர் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் ஆலத்தூர் கிராமத்தில் ராஜா (33)
என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்ததையடுத்து, தனிப்படை போலீசார் ராஜாவை கைது செய்து, பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
ராஜாவிடம் இருந்து ஹான்ஸ் (140 பண்டல் – 42 kg) விமல் பாக்கு (8 பண்டல் – 624 கிராம்) V1 பான்மசாலா (10 பண்டல் – 300 கிராம்) என மொத்தம் 42.924 கிலோ எடையுள்ள ரூ.17.760 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.