Perambalur: Man arrested for stealing sand in tractor; police take action!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில், அகரம்சீகூர் புறக்காவல் நிலைய போலீசார், சிறப்பு ரோந்து சென்ற போது திட்டக்குடி – மருதையான் கோவில் சாலையில், கைபெரம்பலூர் பிரிவு பாதை அருகே டிராக்டரில் மணல் திருடிக் கொண்டு வந்த இருவரில், ஒருவரை பிடித்து விசாரித்தபோது கோவிந்தராஜப்பட்டினத்தை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ் (42) என்றும், தப்பிய ஓடியவர் கைபெரம்பலூரை சேர்ந்த ராமசாமி மகன் தவமுருகன் (46) என்பது தெரிய வந்தது.
சுரேஷ் கைது செய்த, போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 1.5 யுனிட் மணல் மற்றும் டிராக்டரையும், பறிமுதல் செய்தனர். பின்னர் சுரேஷை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், சட்டவிரோதமாக மணல் திருட்டு, கள்ளச்சாராயம், கஞ்சா, போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய விவரங்கள் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.