Perambalur: Manager arrested for defrauding petrol pump of Rs. 28.4 lakhs! Crime Branch police take action on complaint!
அரியலூர் மாவட்டம் ராஜாஜி நகரை சேர்ந்த மருதமுத்து மகன் கஜேந்திரன் (61). பெரம்பலூர் MM இண்டேன் கேஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இண்டேன் ஆயில் நிறுவனத்தில், பெரம்பலூர் 4 ரோடு – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சரவண பாலாஜி ஏஜென்சிஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் ஒன்றையும் கூடுதலாக நடத்தி வருகிறார்.
இந்த பெட்ரோல் பங்கில் முதுநிலை மேலாளராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த சன்னாசி மகன் சதீஷ் என்பவரை வேலைக்கு வைத்திருந்தார். அவர் பெட்ரோல் பங்கில் முறைகேடாக, கணக்கில் காட்டாமல் ரூ28 லட்சத்து, 46 ஆயிரத்து 764 -யை பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாக ஓனர் கஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட குற்ற பிரிவு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, சதீஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.