Perambalur: Masimaham chariot festival; Kalkol festival at Brahmapureeswarar temple!
பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மகம் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பந்தல் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. முகூர்த்தகால் ஈசன் மற்றும் அம்பாளிடம் வைத்து பூஜை செய்து திருக்கோயில் வலம் வந்து, பந்தல் கால் மங்கள வாத்தியம் முழங்க நடப்பட்டது. அதற்கு மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், ராஜமாணிக்கம், ராஜேந்திரன், திருஞானம், சீர்பாத பணியாளர்கள் திரளான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு ஈசன் அருளை பெற்றனர். பூஜைகளை கவுரிசங்க சிவாச்சாரியார் மற்றும் முல்லை சிவாச்சாரியார் செய்தனர். அதனைத் தொடர்ந்து வரும் தேதி வரும் மார்ச்.4 அன்று காலை கொடியேற்றமும், முக்கிய நிகழ்வான திருத்தேர் (12/03/2025) அன்று நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு விழாக்குழுவின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.