Perambalur: MDMK protest led by Durai Vaiko MP, emphasizing the demands of farmers!
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் இன்று மாலை, மதிமுகவினர், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில், வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக்கியதை கண்டித்தும், 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்காததை கண்டித்தும், நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தாததை கண்டித்தும், தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், புயல் பாதிப்பு உள்ளான பகுதிகளுக்கு நிவாரணம் வழங்காத மத்திய அரசை கண்டித்தும் கோசங்களை எழுப்பினர். மக்காச்சோளத்திற்கு 1 சதவீத செஸ் வரியை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டுகோள் விடுத்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், அரியலூர் எம்.எல்.ஏ சின்னப்பா, வாரணாசி ராஜேந்திரன், உள்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.