Perambalur: Meal in AC with ghee-lentil powder for Rs.100: Amazing taste at Sri Arputha Hotel!
திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பனானா லீப் நிறுவனம் தற்போது பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நுழைவு வாயில் எம்.ஜி.ஆர் சிலை எதிரே அற்புதா வெஜ்-ரெஜ்டாரணட் திறக்கப்பட்டுள்ளது. காலையில் அறிமுக விழா சலுகையாக ரூ. 50க்கு மினி டிபன் வழங்குகிறது.
அதே போல, மதியம் உணவாக ரூ.100க்கு சைவ சாப்பாடு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதில், தரமான அரிசியில் சமைக்கப்பட்ட சூடான சாதத்திற்கு நெய்யுடன் சுவையான பருப்பு பொடி, சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர், மற்றும் அப்பளத்துடன் ஒரு பொரியல், கூட்டு, கீரை வகைகளையும், தொட்டுக் கொள்ள ஊறுகாயும் மற்ற ஹோட்டல்களை போல தட்டில் வாழைஇலை வைத்து வழங்காமல் வாழை இலையையே வழங்குகின்றனர்.
இது வழக்குறைஞர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், கவர்ந்துள்ளது. அதோடு கூடுதலாக ஏசியில் வழங்குகிறார்கள். மற்ற ஹோட்டல்களில் ஏசிக்கு 20 சதவீதம் வசூலிக்கும் நிலையில், கட்டணமில்லாமல் வழங்குவது வாடிக்கையாளர்கள் அமைதி, நிம்மதியாக உணவருந்த வசதியாக உள்ளது. குடிக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குகின்றனர்.
ஸ்பெசல் மீல்ஸ் ரூ.180 க்கும் வழங்குகிறார்கள். அதற்கு சூப், உள்ளிட்ட ஐட்டங்களை கூடுதலாக உள்ளது. மேலும், சாதா மற்றும் ஸ்பெசல் ஸ்வீட்களையும் தற்போது அங்கு விற்பனை செய்து வருகின்றனர். மதிய உணவருந்தும் வாடிக்கையாளர்கள் தற்போது அற்புதா பக்கம் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.