Perambalur: Minister Sivasankar campaigns in the Kunnam constituency, appealing to voters to cast their ballots for the ‘Rising Sun’ symbol to ensure victory, thereby paving the way for the arrival of numerous additional development schemes.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் மீண்டும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்யிடும் அமைச்சர் சிவசங்கர் இன்று காலை ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் தனது கூட்டணி கட்சியினருடன் வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரத்தின் அவர் பேசியதாவது:
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், நம்முடைய எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவினுடைய வேட்பாளராக, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஆதரவோடு போட்டியிடுகின்ற எனக்கு, உதயசூரியன் சின்னத்திலே வாக்களியுங்கள் என்று கேட்டு வந்திருக்கின்றோம்.
இந்த வெய்யில் நேரத்திலும் ஒரு சிறப்பாக வரவேற்பை அளித்திருக்கின்ற நமது பெரியோர்கள், தாய்மார்கள் அத்தனை பேருக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதலமைச்சருடைய ஆட்சி தொடர வேண்டும். மகளிருக்கு இன்றைக்கு ₹1,000 உதவி உரிமைத் தொகை தருகிறார். மீண்டும் ஆட்சி அமைகிற நேரத்தில் அதை ₹2,000 ஆக உயர்த்த இருக்கிறார். அதேபோல நம் வீட்டுப் பிள்ளைகள் கல்வியிலே அவசியம் கவனம் செலுத்தணும், எல்லா பிள்ளைகளும் கல்லூரி படிக்கணும்னுதான், புதுமைப் பெண் திட்டம்: பெண் குழந்தைகளுக்கு மாதம் ₹1,000 தருகிறார். தமிழ்ப் புதல்வன் திட்டம்: ஆண் குழந்தைகளுக்கு மாதம் ₹1,000 தருகிறார்.
பள்ளியில் படிக்கிற பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டம் கொண்டு வந்திருக்கிறார், அதை இப்போ எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் போகிறார். முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கலர் டிவி கொடுத்தார். இன்னைக்கும் அந்த டிவி சிறப்பா ஓடிக்கிட்டு இருக்கு. அதேபோல ஒரு சிறப்பான திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இல்லத்தரசி கூப்பன் கொடுக்கப் போறார். அந்த கூப்பன் ₹8,000 பெறுமானமுள்ள கூப்பன். அதை கடையில கொடுத்து நம் வீட்டுக்கு என்ன பொருள் தேவையோ – டிவி-யோ, கிரைண்டரோ, பிரிட்ஜோ, மிக்ஸியோ எது வேண்டுமானாலும் நாம் வாங்கிக் கொள்ளலாம் என்கின்ற அந்த வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார்.
இன்றைக்கு நம்முடைய வரகுப்பாடியைப் பொறுத்தவரை, வரகுப்பாடி காரை தார்ச்சாலை: 140 லட்சத்தில் செய்யப்பட்டிருக்கிறது. வரகுப்பாடி சாத்தனூர் சாலை: 35 லட்சத்தில் மேம்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்து வசதி: 17-ம் நம்பர் பஸ் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சென்னை செல்வதற்கு ஒரு புதிய வழித்தடம் இங்கே கொடுத்திருக்கிறோம். இதெல்லாம் உங்களுடைய பிரதியாகிய என்னை அமைச்சராக்கிய காரணத்தினால் செய்ய முடிந்தது.
பழைய பேருந்துகளை எல்லாம் மாற்றி இன்னைக்கு எல்லாம் புதுப் பேருந்தா ஓடுது. உண்டாயில்லையா? அதேபோல: குன்னம்: போக்குவரத்து பேருந்து பணிமனை, கொளக்கநத்தம்: அரசு கலைக் கல்லூரி.
வெண்மணியில் ஒரு அரசு ஐடிஐ, மாவட்டத்தில் அனைத்து மாணவர்களும் சிறப்பான கல்வி பெற, மருதையான்கோவில் அருகே ₹50 கோடி செலவில் மாடல் ஸ்கூல் (Model School) கட்டப்பட்டு வருகிறது. மின்சாரப் பிரச்சனை தீர்ப்பதற்கு, கொளக்கநத்தத்தில் ஒரு சப்-ஸ்டேஷன் (Sub-station) கொடுத்திருக்கிறார்.
இப்படி நம்முடைய முதலமைச்சர் இந்தத் திட்டங்களையெல்லாம் நம்முடைய தொகுதிக்கு கொடுத்திருக்கிறார். இந்தத் திட்டங்கள் இன்னும் புதிய திட்டங்கள் நமக்கு வந்து சேர வேண்டும். அதற்கு நீங்கள் நம்முடைய முதலமைச்சருக்கு ஆதரவு தர வேண்டும். உங்களுடைய சட்டமன்றப் பிரதிநிதியாக என்னை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டு, இந்த வெய்யிலிலும் கூடி நின்று வரவேற்பு அளித்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி, நன்றி, நன்றி! என்று விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் என பேசினார்.
கொளக்காநத்தம் ராகவன், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், விசிக தமிழ்க்குமரன் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டர். புதுக்குறிச்சி, தெரணி, காரை, சமத்துவபுரம், மலையப்ப நகர், வரகுபாடி, சிறுகன்பூர், தெற்குமாதவி, நத்தக்காடு, சா.குடிக்காடு, சாத்தனூர், குரும்பாபாளையம், கொட்டரை, ஆதனூர், மதுராகுடிக்காடு, சீராநத்தம், இலந்தங்குழி மேலமாத்தூர் வரிசைப்பட்டி, தங்கநகரம், மருதையான்கோவில் அழகிரிபாளையம் கீழமாத்தூர், மங்கலம், சீத்தாராமபுரம், சடைக்கன்பட்டி, தொம்பன்குடிசை தொண்டப்பாடி அல்லிநகரம், குறிஞ்சிப்பாடி, கீழஉசேன்நகரம், மேல உசேன்நகரம் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அக்கிராமங்களில் இருந்த பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497