Perambalur: Minister Sivasankar flagged off four buses with extended routes.

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று குன்னம் மற்றும் லப்பைகுடிகாடு ஆகிய பகுதிகளுக்கு வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட 4 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் கிளையின் மூலம் பெரம்பலூரிலிருந்து லப்பைகுடிக்காடு வரை டி. கீரனூர் வழியாக பேருந்தும், அரியலூரிலிருந்து தாமரைப்பூண்டி வரை குன்னம், வேப்பூர் மற்றும் சன்னாசி நல்லூர் வழியாக மற்றொரு புறநகர் பேருந்தும் பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் இயக்கப்படுகின்றன.குன்னம் பணிமனையில் இருந்து குன்னம், அசூர், எழுமூர் வழியாக அரியலூரிலிருந்து தொழுதூருக்கு 2 பேருந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், ராஜேந்திரன், முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பல் டாக்டர் கருணாநிதி மற்றும் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497