Perambalur: Minister Sivashankar congratulated 250 pregnant women by hosting a community baby shower!
பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் தலைமையில் ஜே,கே.மஹாலிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 150 கர்ப்பிணி பெண்களுக்கு குன்னம் எம்.எஸ்.டி திருமண மண்டபத்தில் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
பெரம்பலூர் எம்.பி., அருண் நேரு, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய 4 வட்டங்களிலும் தலா 100 பயனாளிகள் வீதம் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து, 30 நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர்களுக்கான நல வாரிய அட்டைகளையும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.
பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், துரைசாமி குழந்தை வளர்ச்சித்திட்ட வட்டார அலுவலர் அருணா (வேப்பந்தட்டை), பிரேமா (பெரம்பலூர்) திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அழகு.நீலமேகம், பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் யூனியன் சேர்மன்கள் வேப்பூர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.