Perambalur: Minister Sivashankar inaugurated the works including daily vegetable market at a cost of Rs. 4.64 crore!
போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கட், துறைமங்கலம் காவலர் குடியிருப்பு, கலைஞர் கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் கலெக்டர் கிரேஸ் தலைமையில், ரூ.4.64 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பெரம்பலூர் எம்.பி., கே.என்.அருண் நேரு, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ராஜ்குமார், துரைசாமி, நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், சிவக்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் , மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் டி.ஆர். சிவசங்கர், நகராட்சி ஆணையர் ராமர், பெரம்பலூர் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.