Perambalur: Minister Sivashankar laid the foundation stone for new project works worth Rs. 1.70 crore!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ரூ.1.70 கோடி மதிப்பிலான 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிம வள நிதியின் கீழ் பேரளி மற்றும் மருவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.11,03,000 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை அமைக்கும் பணி, பெரியம்மாபாளையம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் பேரளி ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி, குன்னம் ஊராட்சியில் பிசி மற்றும் வடக்கு தெருவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, வரகூர் ஊராட்சியில் பி.சி தெருவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி,
ஊராட்சி பொது நிதியின் கீழ் ஒதியம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, பெரியம்மாபாளையம் முதல் சீராநத்தம் சாலை வரை பைப், கல்வெட்டு அமைக்கும் பணி, கரம்பியம் கிராமம், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி சாலை முதல் கரம்பியம் சாலை வரை தார் சாலை பலப்படுத்துதல் பணி, அந்தூர் ஊராட்சியில் அண்ணாநகர் கிழக்கு தெரு முதல் வரகூர் சாலை வரை சாலை பலப்படுத்துதல் பணி, கொளப்பாடி ஊராட்சி பி.சி.அய்யனார் கோவில் தெரு சாலை பலப்படுத்துதல் பணி, பெரிய வெண்மணி ஊராட்சி வடக்குத் தெருவில் 500 மீட்டர் தார் சாலை அமைக்கும் பணி,
குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குன்னம் பணிமனை பேருந்து நிறுத்தத்தில் வடக்கு புறம் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, வெண்மணி ஐ.டி.ஐ. அருகில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, சின்னவெண்மணி – கொத்தவாசல் சந்திப்பில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் குன்னம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1,69,99,000 மதிப்பீட்டில் 20 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, ஒதியம் சமத்துவபுரத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக் கடையை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர் உள்பட அரசு அலுவலர்கள் பலர்உடன் வந்திருந்தனர்.