Perambalur: Minister Sivashankar laid the foundation stone for works worth Rs. 9.98 crore and inaugurated the completed works!

Vayalappadi School
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் நபார்டு திட்டத்தின் கீழ் வீரமநல்லூர் ஊராட்சியில் ரூ.67.75 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் அங்கனூர் சாலை வரை சாலை மேம்படுத்தும் பணி, ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் கீழக்கொட்டாய் சாலை மேம்படுத்தும் பணி, ரூ.66.55 மதிப்பீட்டில் பரவாய் – ஆண்டிக்குரும்பலூர் சாலை முதல் எழுமூர் – பரவாய் சாலை வரை சாலை மேம்படுத்தும் பணி, ரூ.1 கோடி மதிப்பீட்டில் அ.குடிக்காடு முதல் கை.பெரம்பலூர் வரை சாலை பலப்படுத்தும் பணி, ரூ.76.66 லட்சம் மதிப்பீட்டில் திருமாந்துறை மெயின் ரோடு முதல் ஒத்தினக்குளம் காட்டுப்பாதை வரை சாலை மேம்படுத்தும் பணி,
15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி, அத்தியூரில், ரூ.4.83 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் (446 மீ அமைக்கும் பணி மற்றும் 80 தனிநபர் வீட்டிற்கு குடிநீர் குழாய் வழங்கும் பணி, அத்தியூர் 1வது வார்டில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன் (825மீ) அமைக்கும் பணி, பள்ளி உட்கட்டமைப்பு வசதி நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 வகுப்பறை கட்டிடம் மற்றும் புதிய கணினி அறை கட்டிடம் கட்டும் பணி, ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கணினி அறை கட்டும் பணி என மொத்தம் ரூ.8.73 கோடி மதிப்பீட்டில் 10 புதிய புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வயலப்பாடி, ஓலைப்பாடி, வைத்தியநாதபுரம், திருமாந்துறை ஆகிய கிராமங்களில் தலா ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வயலப்பாடி ஊராட்சியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15.72 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்ட ஒரு வகுப்பறை கட்டிடம் என மொத்தம் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் 05 முடிவுற்ற திட்டப்பணிகள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாவட்ட திமுக பொறுப்பபாளர் வீ. ஜெகதீசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497