Perambalur MLA Prabhakaran raids city buses; On the go, make sure the old lady gets the old age Pension !!

பெரம்பலூர் எம்.எல்.ஏ., எம்.பிரபாகரன் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்து மகளிர் மற்றும் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பூலாம்பாடி நோக்கி சென்ற அரசு நகர பேருந்தில் பெரம்பலூரில் இருந்து கோனேரிப்பாளையம் வரை திடீரென பயணம் செய்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள மகளிர் இலவச பயண வசதியில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என பெண் பயணிகளிடமும், பிற பயணிகளிடமும் கேட்டறிந்தார்.

பின்னர், வி.களத்தூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த நகரப் பேருந்தில் எசனை நார்க்காரன் கொட்டாய் நிறுத்தத்தில் இருந்து ஏறிய அவர், அதில் பயணம் செய்த பெரம்பலூர் எடத்தெரு பகுதியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரிடம் முதியோர் உதவித்தொகை சரியாக வருகிறதா என்று கேட்டறிந்தார்.

அதே பேருந்தில் பயணம் செய்த வேப்பந்தட்டை தாலுக்கா, என்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னம்மாள் என்பவர் முதியோர் உதவித்தொகை வரவில்லை என தெரிவித்தார்.

அந்த மூதாட்டிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது உறுதி அளித்தார். மாஸ்க் அணியாமல் பயணம் செய்த பயணிகளுக்கு மாஸ்க் வழங்கி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தினார்.

இதனால், நகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.எல்.ஏ நேரில் பேருந்தில் ஆய்வு செய்த சம்பவம், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!