Perambalur MLA Prabhakaran visits bus stand Public toilets Action to correct grievances!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் தண்ணீர் வருவதில்லை என்றும் சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பின்றி இருப்பதாகவும் பெரம்பலூர் எம்.எல்.ஏ., எம்.பிரபாகரனுக்கு செல்போனில் வந்த தகவலையடுத்து, உடனடியாக அந்த இடத்திற்கு திடீரென்று சென்ற அவர், அங்கிருந்த ஆண்கள் இலவச கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவறைக்கு தண்ணீர் வராமல் சின்டெக்ஸ் டேங்க் காலியாக இருந்தது. கழிவறைக்குள் உள்ள தடுப்பு பல இடங்களில் உடைந்து கிடந்தது. இவற்றை உடனடியாக சரி செய்ய நகராட்சி அதிகாரிகளிடம் செல்போனில் தெரிவித்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் காய்கறிகள் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரக்கிடங்கை பார்வையிட்ட அவர், அங்குள்ள பணியாளர்களிடம் விவசாயிகளுக்கு உரம் வழங்குவது குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு பணிபுரியும் நகராட்சி ஊழியர்களுக்கு முகக்கவசம் கொடுத்து, அணிவதின் அவசியத்தை எடுத்துக் கூறினார். தனி மனிதரின் புகாருக்கு எம்.எல்.ஏ நேரில் சென்று கழிவறையை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ பிரபாகரனை பொதுமக்கள், பயணிகள் பாராட்டி வருகின்றனர்.