Perambalur MP Parivendar donated Rs 10 lakh worth of mattresses for Corono patients at his own expense.

கொரோனா பெருந் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிரம்பி வருகின்றன. மருத்துவ மனைகளில் படுக்கை வசதி பற்றா குறையும் நிலவுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், அதனை சமாளிக்க பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், மாணவர்கள் விடுதிகள் தற்காலிக மருத்துவ முகாம்களாக மாற்றப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தார், ரூ. 10 லட்சம் மதிப்பிலான 100 ஜோடி கட்டில், மெத்தைகளை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிதி உதவியுடன் நோயாளிகளுக்காக இலவசமாக வழங்கினார். அதனை, பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கிறிஸ்டியிடம், ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் ஏ வி ஆர் ரகுபதி தலைமையில், மாவட்ட பொருளாளர் பரமசிவம், மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத், இளைஞரணி துணைச் செயலாளர் சுகுமார், ஆலத்தூர் ஒன்றிய தலைவர் காமராஜ், பெரம்பலூர் ஒன்றிய தலைவர் அழகு வேல், நகர தலைவர் ஆர்.சி.ஆர். ராமலிங்கம் முன்னிலையில் வழங்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!