Perambalur: Muslim community votes in Lappaikudikadu likely to split this time! Kunnam emerges as the ‘Star Constituency’!!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் இம்முறை திமுகவின் குன்னம் தொகுதியில் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் அதிமுக, ஐஜேகே, கூட்டணியினர் இம்முறை வியூகம் வகுத்து அதிக ஓட்டுக்களை பெற தீவிர வேலை பார்த்து வருகின்றனர்.
திமுக வாக்குவங்கியில் தற்போது தவெக பெண்கள் மத்தியில் அதிக ஆதரவு இருப்பதால் பெண்களுக்கான ஓட்டுக்கள் சத்தமில்லாமல் பிரியும் வாய்ப்பும் உள்ளது. இதே போல முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்த மாநிலங்களில் பாஜகவை ஆதரித்து அதிக பெண்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியை தவிர மற்ற கிராமப் பகுதிகளில் சமபலத்துடன் திமுக Vs அதிமுக கூட்டணி மோதுகிறது.
பலே கில்லாடியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதியை ஒதுக்கி வென்று வா என அனுப்பி விட்டார். பல ஊர்களில் திமுக அமைச்சர்களை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறும் நிலையில் குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் சிவசங்கரை எதிர்த்து போட்டியிட ஐஜேகேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐஜேகே தமிழ்நாட்டில் பல்லாவரம், குன்னத்தில் போட்டியிடுகிறது. ஆண், பெண் சமம் என்ற அடிப்படையில் ஆண் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் ஐஜேகே போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. குன்னத்தில் ஐஜேகே மாவட்டத் தலைவர் அன்பழகனின் மனைவி சரண்யாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இரு தொகுதியில் வென்றால் மட்டுமே 100 சதவீத வெற்றியை அடைய முடியும் என்பதால் அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு அமைச்சர் சிவசங்கரை வீழ்த்த அனைத்து விதமான வியூகங்களையும் வகுத்து 82 வயதிலும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். அதே போல சிவசங்கரும், தொகுதியில் சளைக்காமல் வாரவாரம் மக்களுகக்கான களப்பணியையும், கட்சியினருக்கு செய்யக் கூடிய பணிகளையும் செய்துள்ளார். குன்னம் தொகுதியில் அமைச்சர் சிவசங்கர்தான் வெற்றி பெறுவார் என்றிருந்த நிலை தற்போது அவருக்கு சோதனை என பலப்பரீட்சையாக மாறி உள்ளது. எதிர் கூடாரத்தில் இருந்தும் ஆட்கள் கட்சி மாறி அமைச்சர் முன்னிலையில் திமுகவிலும் இணைந்தும் வருகின்றனர்.
அமைச்சர் சிவசங்கரை எதிர்த்து போட்டியிட பலர் பின்தங்கிய நிலையில், பாரிவேந்தார் துணிச்சலாக களம் காணுகிறார்.
நீயா? நானா? என்ற போட்டியில் ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அதிதீவிரமாக அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக வேலை பார்த்து வருகின்றனர். சாதாரண குன்னம் தொகுதி இந்த போட்டியால், தற்போது மின்னும் ஸ்டார் தொகுதியாக மாறிவிட்டது. பாரிவேந்தர் Vs அமைச்சர் சிவசங்கர் இடையே வெற்றியை தக்க வைத்து கொள்ள கடும் களப்பணி நடந்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தவெக ஒவ்வொரு பூத்திற்கும் குறைந்த பட்ச ஓட்டுக்களை பிரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், இலை, மற்றும் சூரியன் சின்னத்தினர் அதிக வாக்குகளை பெற்றால் மட்டுமே வெற்றிக் கோட்டை தொட முடியும் என்பதால் அல்லும்பகலும் அயராமல் கடும் பணியாற்றி வருகின்றனர். பாரிவேந்தர் தனது சமூகத்தினர் ஓட்டுக்கள் மட்டும் 40 ஆயிரம் உள்ளதாகவும் அதை வாங்க தீவிரமாக ஸ்கெட்ச் போட்டு விட்டார். மேலும், அதிமுகவினர் மூலம் கூடுதல் ஓட்டுக்களை பெற்று திமுக வேட்பாளரை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்ணனியில் வர களப்பணி முன்னெடுப்பால், திமுகவும் சளைக்காமல் வேலை பார்த்து வருகிறது. திமுக அமைச்சர் சிவசங்கரா? ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரா? என்பது மே.4 ம் தேதி தெரிய வரும்.










kaalaimalar2@gmail.com |
9003770497