Perambalur: “My College Dream” counseling camp for students studying in class 11 and 12; Collector’s information!
பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 29.03.2025 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை பெரம்பலூர், துறையூர் ரோடு, தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாக கூட்ட அரங்கில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர மாணாக்கர்களுக்கு, “என் கல்லூரிக் கனவு” உயர் கல்வி வாய்ப்புகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து, தொழில் வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் கலந்து கொள்ளவரும் மாணாக்கர்கள் அனைவரும் கட்டாயம் தங்களின் EMIS எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் வரவேண்டும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதர மாணாக்கர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு, தெரிவித்துள்ளார்.