Perambalur: Mysterious men snatched an 8-pound thali chain from a woman who was alone at home!

பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணம் அருகே உள்ள ஒகளூர் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி அருள்மொழி (27) இரு ஆண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் நேற்றிரவு வேல்முருகன் வீட்டில் இல்லாத போது அருள்மொழி வீட்டின் உள்பகுதியில் இரு குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு. முன் பகுதி அறையில் வீட்டின் உள்பகுதியில் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார் வீட்டின் வெளிப்பகுதி கதவை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். கதவை திறந்துள்ளார் திடீரென இரு மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கவரின் மூலம் அவரது வாயை அமுக்கி கையை கட்டி கீழே தள்ளி உள்ளே இழுத்து சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். அவரது கணவர் வேல்முருகன் வீட்டிற்கு வந்த போது அருள்மொழி நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார். உடனே அவசர எண் 100 எண்ணில் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில், மங்கலமேடு போலீசார் சம்பவம் குறித்து தீவிர நடத்தி வருவதோடு, நகையை பறித்து சென்ற கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!