Perambalur: Narayanasamy Naidu’s 100th birthday; Political parties and associations including PMK pay tribute by garlanding him!
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் அண்ணா பஸ் ஸ்டாண்டில் உள்ள தமிழகத்திலேயே, பெரம்பலூரில் மட்டுமே அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற விவசாயிகளை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசிடமிருந்து சலுகைகளை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
பாமக சார்பில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 100வது ஆண்டு பிறந்த நாள் விழா பெரம்பலூர் அண்ணா பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன் .செயற்குழு உறுப்பினர் கண்ணபிரான், அமைப்பு தலைவர் மருதுவேல் ,வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் புகழஞ்சலி செலுத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக
பாமகவின் தமிழ்நாடு உழவர் பேரியக்க தலைவர் கோ.ஆலயமணி ,மாநில வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்து கண்டன கோஷம் எழுப்பினர் அப்போது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரம்பலூர்_நகர்மன்றத்தில் ஜி நாராயணசாமி நாயுடு திருவுருவட்சிலையை அகற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்தும் அந்தத் தீர்மானத்தை திரும்ப பெற கோரியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது
அப்படி இந்த சிலையை அகற்ற முயற்சி செய்தால் தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர் . நாராயணசாமி சிலைக்கு திருவுருவ சிலையை பாட்டாளி மக்கள் கட்சி எப்பொழுதும் பாதுகாத்துக் கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
தமிழக விவசாயிகளுக்காக அரும்பாடுபட்ட உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவ சிலையை அகற்ற கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சி நிலைப்பாடு என்றும், மீறி இச்சிலையை அகற்றினால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் மருத்துவர் அய்யா மருத்துவர் சின்ன அய்யா ஆணைக்கிணங்க நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை கட்சி நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, நாராயணசாமி நாயுடு சிலைக்கு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினர். இதனையடுத்து, தமிழக நாயுடு கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ரங்கராஜ் நாயுடு தலைமையிலும், பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையிலும் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் தேமுதிகவினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் தமிழக விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்பினர் அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் அந்தந்த அமைப்புகள் மற்றும் கட்சிகளின் மாவட்ட மாநில நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.