Engliah Summary : Perambalur near the 5 crore 11 lakh by built model school, a video display. Tamil Nadu Chief Minister J.Jayalalithaa inaugurated.
பெரம்பலூர் அருகே 5 கோடியே 11 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்ட மாதிரி பள்ளியை காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழுமத்தூரில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டுள்ளது.
இப்பள்ளியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து இன்று (18.7.2016) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த மாதிரிப் பள்ளியில் 14 வகுப்பறைகள், பயிலும் மாணவ-மாவணிகளுக்கென தனியாக இறை வணக்க கூடம் மற்றும் மாற்றுத் திறானிகளுக்கென சறுக்கு பாதை, இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் துறைக்கென நவீன வசதிகள் தனித்தனி ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் உள்ள பள்ளியாக இம்மாதிரிப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களுடன் கூடிய நூலகம் மற்றும் பெற்றோர்களுக்கான தனியாக காத்திருப்பு அறை,மாணவ. மாணவியர்களுக்கென தனித்தனியே கழிவறைகள் மற்றும் மாற்றுத்தினாளிக்கென தனி கழிவறை வசதிகளுடன் இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கூட்ட அரங்கம், பள்ளியின் முதல்வர் அறையில் இருந்தபடியே மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் அறிவிப்புகளை தெரியப்படுத்த ஒவ்வொரு தளத்திலும் ஒலிபெருக்கி வசதி என அனைத்து வசதிகளும் இப்பள்ளியில் உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் இப்பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தபிறகு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செ.காமராசு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.மகாலெட்சுமி, துணை தலைமை ஆசிரியர் ஆ.கவியரசன், உள்ளாட்சி அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.