Perambalur: No business should be done with gravel, artificial sand, or stockpiled sand without obtaining a registration certificate: Collector’s announcement!

தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011–ன்படி எந்த ஒரு கனிமத்தையும் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் செய்து கனிம விநியோகஸ்தராக பதிவு செய்து கனிம சேமிப்பு கிடங்கு அனுமதி பெற்று மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நடைச்சீட்டு (Transit Pass) பெற்று கனிமங்களை வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மாவட்ட ஆட்சியரிடம் உரிய பதிவு சான்று மற்றும் அனுமதி பெறாமல் கனிமங்களை இருப்பு வைத்தல் மற்றும் உரிய நடைச்சீட்டின்றி வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் ஆகியவை தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011-ன்படி அபராதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல் அரவை தொழிலகங்களின் (Crusher) உரிமையாளர்கள் தங்களது கல் அரவை தொழிலகங்களில் (Crusher units) அரைக்கும் ஜல்லி கற்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கங்கள், கனிம போக்குவரத்து மற்றும் சேமித்தலை தடுத்தல் மற்றும் கனிம விநியோகஸ்தர்கள் விதிகள் 2011–ன்படி படிவம் A (Form A)-ல் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்து கனிம சேமிப்பு கிடங்கு பதிவுச் சான்று பெற்று பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நடைச்சீட்டு பெற்று கனிம இருப்பு கிடங்குகளிலிருந்து எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

கனிம இருப்பு கிடங்கு பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்க, இருப்பு கிடங்கு இயங்கி வரும் புல எண்ணின் புல வரைபடம், கூட்டு வரைபடம், சிட்டா, அடங்கல், “ அ” பதிவேடு ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்ப கட்டணம் ரூ.10,000-ஐ கீழ்கண்ட கணக்கு தலைப்பில் செலுத்தி அசல் செலுத்துச் சீட்டுடன்; பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக கலெக்டருக்கு விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கணக்கு தலைப்பு: 0853-Non Ferrous Mining & Metallurgical Industries – 102 Mineral Concession Fees Rents and Royalties – AA – Quarries and Minerals (D.P. Code, 0853-00-102-AH-22705)

மேலும், உரிய பதிவுச்சான்று பெறாமல் ஜல்லி மற்றும் செயற்கை மணல் உள்ளிட்ட கனிமத்தை இருப்பு வைத்து வியாபாரம் செய்தல் மற்றும் உரிய நடைச்சீட்டு -இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் கண்டறியப்பட்டால் கனிமம் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு மேற்படி விதிகளின் கீழ் அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!