Perambalur: No cases are pending in the District Consumer Disputes Redressal Commission! All cases have been resolved!

பெரம்பலூர்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் திலகா மற்றும் முத்துகுமரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன்படி வழக்குகள் 3 மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத நிலையை எட்டியுள்ளது. அதாவது வழக்குகள் 3மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பல்வகை மனுக்கள் உள்பட 650-க்கும்மேற்பட்ட வழக்குகள் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பல வழக்குகளில் நிவாரணத் தொகை நுகர்வோர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் வாங்கிய பிற பொருட்களில் ஏற்பட்டுள்ள குறைகள், சேவை குறைபாடுகளுக்கும், வங்கித் துறை, காப்பீட்டுத் துறை, மருத்துவத் துறை, இறைமை இல்லா அரசுத் துறை, கட்டுமானத் துறை, தபால் துறை, போக்குவரத்து துறை மற்றும் மின்னணு வணிகம் (இ-காமர்ஸ்) உள்பட பல துறைகளில் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் குறித்த வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. சமரச தீர்வு மையமும் இந்த ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!