Perambalur: NTK Candidate Suddenly Replaced; Suganya Files Nomination as New Candidate!

பெரம்பலூர் தனித் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்த ஜான்சிராணி என்பவர் தீடீரென இன்று மாற்றம் செய்யப்பட்டு, சுகன்யா என்பவர் அறிவிக்கப்பட்டு இன்றே அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பாளர் பற்றி வாழ்க்கை குறிப்பு: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுகன்யா (37), கணவர் பெயர் : ஜஸ்டிஸ் கோபிநாத், பெற்றோர்கள் சேகர் – சரோஜா, BA English பட்டம் பெற்றுள்ளார். திருமணம் ஆன இவருக்கு சேரன் ((17), யாழினி (14), மாறன் (9) என 3 குழந்தைகள் உள்ளனர். விவசாயம் தொழில் செய்து வருகிறார். அக்கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரது கணவர் ஜஸ்டிஸ் கோபிநாத் நா.த கட்சியில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு மாநில பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வேட்பாளராக அறிவிக்கபட்டு மனுதாக்கல் செய்த ஜான்சிராணி மாற்றம் செய்ததற்கான காரணத்தை இதுவரை அக்கட்சியினர் தெரிவிக்கவில்லை.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!